பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடும் ஒடும் 21

அந்த நத்தையைப் பார்த்து, 'தம்பி, நீ ஏன் இந்த வீட்டைச் சுமந்துகொண்டு திரிகிருய்?" என்று ஆமை கேட்டது. நத்தைக்கும் தனியே இருக்க முடியவில்லையே என்ற வருத்தம் மனசுக்குள் இருந்தது. "அண்ணு, இந்தக் கூட்டை என்னல் விட முடியாதே' என்று தன் துயரத்தை நத்தை சொல்லியது. . - -

"அது சரி அண்ணு, நீ ஏன் இந்தக் கனமான ஒட்டைச் சுமக்கிருய்?' என்று அது ஆமையைக் கேட்டது.

அது என் தலைவிதி. நீ கூட்டைச் சுமக்கிருய்; நான் ஓட்டைச் சுமக்கிறேன். இதைச் சுமந்து கொண்டு வேகமாக நடக்கவே முடியவில்லை. எனக்கு நாலு கால் இருந்தாலும் மனம் போல வேக மாக எட்டி வைத்து நடப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்றது ஆமை. x .

"நானும் அப்படித்தான் அண்ணு. என்லுைம் வேகமாகப் போக முடியவில்லை. உனக்காவது நாலு கால்கள் இருக்கின்றன. எனக்குக் காலே இல்லை. வயிற்றிலே ஊர்ந்து போகிறேன். இந்தச் சுமையையும் சுமந்துகொண்டு போகவேண்டி யிருக்கிறது” என்று நத்தையும் தன் துயரத்தைக் கூறியது. " . . - -

அப்போது ஒரு மரவட்டை அங்கு வந்தது. ஆமையும் ந்த்தையும் பார்த்தன. அந்த 35 (55{وعی :