பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடும் ஒடும் 25

களேயும் வெளியில் நீட்டி நகரத் தொடங்கியது. நத்தையும் கூட்டிலிருந்து வெளிப்பட்டது. 'ஆமை, அண்ணு அந்தக் காக்கையைக் கண்டு மிகவும் பயமாகப் போய்விட்டது. என் கூட்டுக்குள் ஒளிந்து கொண்டேன்' என்றது. நத்தை.

"ஆமாம் தம்பி, நான் கூடத்தான் பயந்து போனேன். என் ஓ ட் டு க் கு ள் மறைந்து கொண்டேன். அது சரி; அந்த மரவட்டை எங்கே ? காணவில்லையே 1’ என்றது. -

'அந்த மரவட்டையைக் காக்கை கொத்திக் கொண்டு போய் விட்டதென்று தோன்றுகிறது. அது முனகுவது என் காதில் கேட்டது” என்றது. நத்தை. -

“நல்ல வேளை ! நாம் தப்பினுேம் இந்த ஒடும் கூடும் பெரிய சுமை என்று வருந்தினேம்ே; இவை இல்லாவிட்டால் நம்மை அந்தக் காக்கை என்ன பாடு படுத்தியிருக்குமோ ? மரவட்டையின் கதிதான் நமக்கும் நேர்ந்திருக்கும்’ என்று சொல்லிப் பெரு. மூச்சு விட்டது ஆமை, -

“ஆம் அண்ணு ! நீ சரியாகச் சொன்னுய். இந்த நம் பாதுகாப்பை நாம் சுமை என்று நொந்து கொண்டது தவறு” என்று நத்தையும் சொல்லி, ஆமையோடு சேர்ந்து மெல்ல நகர்ந்தது. ‘. .