பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு யானைகள் 27

கோயிலில் உள்ள பெண் யானையை வெளியில் நிறுத்தியிருந்தார்கள். அந்தப் பக்கமாக வந்த அரசனுடைய யானே அங்கே நின்றது. பெண் யானையைக் கண்டதனுல்தான் அவ்வாறு நின்றது.

அந்த யானே கன்ருக இருந்தது முதல் அரசனிடம் இரு ந் த து. அது நாட்டிலே வளர்ந்ததே அன்றிக் காட்டை அறியாதது, ஊர் தெரியும்; கோவில் தெரியும்; காடு தெரியாது.

பிடியைக் கண்டவுடன் அதற்கு ஒரு கிளுகிளுப்பு உண்டாயிற்று, அரசன், நடந்து கொண்டிருந்த களிறு கோயிலுக்கருகில் நின்றதைக் கண்டான். அதை உசுப்பி ஒட்டின்ை. அது நகராமல் அங்கே நின்றது. . .

கோயில் யான மெல்ல அதன் அருகே வந்தது. அது மிகவும் சாதுவான யானே. மக்கள் அதனிடம் அச்சமின்றிப் பழகினர்கள், யாரேனும் குழந்தை வந்தால் மாவுத்தன் அந்தக் குழந்தைக்கு அருகே யானையைக் கொண்டு வந்து நிறுத்துவான். அது தன் துதிக்கையைத் தூக்கிக் குழந்தையின் தலையின் மேல் தடவும். அதனல் குழந்தைக்கு நன்மை உண்டாகும் என்று மக்கள் நம்பினர்கள். யானே. தடவியபிறகு அதன் துதிக்கையில் கால் ரூபாய், அரை ரூபாய் கொடுப்பார்கள். அது வாங்கி மாவுத் தனிடம் கொடுக்கும். இது அவனுக்குக் கிடைக்கும் சிறிய வருவாய். .