பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு காட்டில் ஒரு குரங்கு வாழ்ந்து கொண் டிருந்தது. ஒரு நாள் அந்த வழியே போன சில பக்தர்கள் அந்தக் குரங்கு தங்கியிருந்த மரத்தடியில் சிறிது நேரம் அமர்ந்து பேசிக்கொண் டிருந்தார்கள். "நாளேக்கு அடுத்த நாள் ஏகாதசி. அன்று நான் உபவாசம் இருப்பேன். மறுநாள் துவாதசி, அன்று. காலேயில்தான் பாரணை செய்வேன்; சாப்பிடுவேன்” என்று ஒருவர் சொன்னர். உபவாசம் இருந்து மறு நாள் சாப்பிடுவதைப் பாரணை என்று சொல்வது