பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரங்கு உபவாசம் 33

வழக்கம். உபவாசம் இருப்பதாகச் சொன்ன பக்தரைப் பார்த்து, “நானும் ஏகாதசி விரதம் இருப்பவன்தான்; அதனுல் எவ்வளவோ பலன் உண்டு என்று என் குருநாதர் சொல்லியிருக்கிருர்’ என்று மற்ருெரு பக்தர் சொன்னர். மேலும் அவர்கள் ஏகாதசி விரதத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார் கள். பிறகு போய்விட்டார்கள்.

அவர்கள் பேசிய பேச்சையெல்லாம் குரங்கு கேட்டுக் கொண்டிருந்தது. அதற்கு, "நாமும் ஏன் உபவாசம் இருக்கக் கூடாது ?" என்று தோன்றியது. 'உண்ண வேண்டும் என்ருல்தானே பழத்தையும் காயையும் தேடவேண்டும் ? பட்டினியிருந்து விரதம் காப்பதற்கு என்ன வேண்டும்? விரதம் இருப்பதனுல் எத்தனையோ பலன் உண்டு என்று அவர்கள் சொன்னர்கள். நாமும் விரதம் இருந்து அந்தப் பலனைப் பெறலாம் என்று தீர்மானம் செய்தது.

நல்ல வேளையாக அடுத்த நாளுக்கு அடுத்த நாளே ஏகாதசி வந்தது. பக்தர்கள் பேசிக்கொண்ட திலிருந்து குரங்குக்கு அது தெரிய வந்தது. எப்படி யும் உபவாசம் இருந்து பார்த்துவிடுவது என்று அது உறுதி செய்துகொண்டது. -

ஏகாதசி வந்தது. குங்கு உபவாசம் இருந்தது. மரங்களில் தங்கியிருந்தால் எதையாவது பறித்துத

3س.19 .5 |