பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரங்கு உபவாசம் 35

பிறகு அடுத்த நாள் நல்ல பழங்களாகத் தின்ன வேண்டும் என்பதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.

அடுத்தபடி அதற்கு ஒரு யோசனை தோன்றியது. நாளேக்கு எப்படியும் காலேயில் பாரனே பண்ணவேண்டும். இப்படியே இங்கே தங்கினுல் நாளேக்கு ஏதாவது மரத்தில் ஏறித்தானே பழத்தைப் பறித்து உண்ணவேண்டும் ? இப்போதே அந்த மரத்தின் அடியில் போய்த் தங்கிளுல் என்ன ? நாளைக்கு விடிந்தவுடனே மரத்தின்மேல் ஏறிப் பழத்தைத் தின்னலாமே ! இங்கிருந்து மரம் வரைக்கும் போகிற காலம் வீணுகாமல் இருக்குமே !'

உடனே அது நிறைய மாம்பழங்கள் இருந்த ஒரு மாமரத்தைத் தெரிந்து கொண்டு அதனடியில் போய்ப் படுத்துக்கொண்டது. இப்போது அதற்குப் பசி அதிகமாயிற்று. ‘.

மறுபடியும் அதற்குப் புதிய எண்ணம் ஒன்று எழுந்தது. இந்த மரத்தடியில் படுத்துக் கிடப்பதில் என்ன லாபம் ? மரத்தின் மேலே ஏறி ஏதாவது பழம் இல்லாத கிளையில் படுத்திருந்தால் விடிந்தவுடன் பழமுள்ள கிளேக்குப் போகலாமே !

இந்த எண்ணம் தோன்றியவுடன் குரங்கு மெல்ல மரத்தில் ஏறிக் கிளேகள் பிரியும் இடத்தில் உட்கார்ந்து சாய்ந்து கொண்டது. அதன் வயிறு கப் கப என்று பசித்தது. - - -