பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரங்கு உபவாசம் 37

யாக இருந்தது. வயிற்றில் பசியோ நெருப்புப்போல எழுந்து வளர்ந்தது.

"இந்தப் பழத்தை நாளேக்கு எப்படியும் பறித்துத் தானே தின்ன போகிருேம் ? இப்போதே பறித்து மடியில் வைத்துக் கொள்ளலாமே! அதனுல் விரதம் கெட்டுப் போகாதே!

இப்படி எண்ணியவுடன் பழத்தைப் பறித்து மடியில் வைத்துக்கொண்டது.

அதற்குப் பிறகும் அதன் யோசனை வளர்ந்தது. ‘இந்தப் பழத்தைக் காம்பு, முனே எல்லாம் நீக்கி விட்டுத் தின்பதுதான் நல்லது. நாளேக்கு அந்தக் காரியத்தைச் செய்வதைவிட இன்றைக்கே செய்தால் என்ன? மனிதர்கள் துவாதசிப் பாரணைக்காக முதல் நாளே கறிகாய்களை நறுக்கி வைத்துக் கொள்வார் களாமே !’

அந்த எண்ணம் தீவிரமாக எழவே, குரங்கு மாம்பழத்தின் காம்பைக் கடித்தது. கொஞ்சம் அழுத்தமாகவே கடித்து விட்டது. காம்போடு சிறிது பழத்தின் பகுதியையே கடித்துவிட்டது. அதன் சாறு வாயில் பட்டது. அது எத்தனே இனிமையாக இருந்தது!