பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நல்ல பிள்ளையார்

ஒரு நாள் வீரசிம்மன் தன் ஊருக்குப் பக்கத்தில் இருந்த காட்டுக்குப் போனுன், அங்கே ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதன் அடியில் ஆள் நுழை யும் அளவுக்குப் பெரிய பொந்து இருந்தது. அங்கே ஒரு வெள்ளைப் பூனே, "மியாவ் மியாவ் ' என்று கத்திக் கொண்டிருந்தது. தும்பைப் பூப் போலச் சுத்த வெள்ளேயாக இருந்த அதை வீரசிம்மன் பார்த்தான், அதன் அருகில் சென்று அதை எடுத்தான், அது ஒன்றும் .ெ ச ய் ய வி ல் லே. அவைேடு ஒட்டிக் கொண்டது.

அந்தப் பூனேயை அவன் எடுத்துக் கொண்டு தன் அரண்மனைக்கு வந்தான். அதன் அழகில் அவன் சொக்கிப் போன்ை, அதைத் தடவிக் கொடுத்தான். பாலும் பழமும் கொடுத்து உண்ணச் செய்தான். அதை மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சின்ை. அதற்கு முத்தம் கொடுத்தான்.

அந்தப் பூனே சாதுவாக இருந்தது. எலியைக் கண்டால் துரத்துவதில்லை. அதற்கு எலியை உண்ணப் பிடிக்காது என்று தோன்றியது. வீரசிம்மன் கொடுத்த பாலே உண்டது. அவன் அதற்கு நெய்யும் சோறும் கலந்து ஊட்டினன். அது சந்தோஷமாகச் சாப்பிட்டது.

ஒரு நாள் அது அங்கிருந்து ஓடியது. வீரசிம்மன் அதன் பின்னே போனன். பழைய ஆலமரப் பொந்துக்குள் அது நுழைந்தது, அவனும் அதன்