பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நல்ல பிள்ளையார்

கள். வெல்வெட்டு மெத்தை தைத்த ஆசனத்தைக் காட்ட, அதில் உட்கார்ந்து கொண்டான்.

'உங்களைப் பார்த்ததில் எங்களுக்கு மிகவும் சந்தோஷம். எங்கள் பெண்ணே நீங்கள் எப்படிச் சந்தித்தீர்கள்?’ என்று அரசன் கேட்டான்.

"அழகான பூனையாக இருந்தாள். எடுத்துக் கொண்டு போனேன். இவள் ஏன் பூனேயாக மாறுகிருள்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!” என்ருன் வீரசிம்மன்.

“ஒரு முனிவர் இங்கே ஓரிடத்தில் தவம் செய்து கொண்டிருந்தார். கண்ணே மூடித் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். இந்தப் பெண் விளையாட்டாக ஒரு பூனேயைக் கொண்டு போய் அவர் மடியில் போட்டாள். அவர் கண்ணேத் திறந்து பார்த்தார். இவள் செய்த குறும்பைக் கண்டு கோபம் கொண்டு, 'நீ பூனேயாக மாறக் கடவாய் ! என்று சபித்தார். இவள் பூனேயாக மாறி எங்களிடம் ஓடி வந்து, "மியாவ்! மியாவ்! என்று கத்தினுள். விசாரித்ததன் மேல் எங்கள் பெண்ணே பூனேயாக மாறிவிட்டா ளென்றும், அதற்குக் காரணம் அந்த முனிவர் இட்ட சாபம் என்றும் தெரிந்தது. உடனே நாங்கள் அவரிடம் சென்று அவர் காலில் விழுந்து அந்தச் சாபத்தைப் போக்க வேண்டுமென்று கெஞ்சிக் கேட்டு மன்ருடிைேம்." - - -