பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைப்பாம்பும் நரியும் 49

குளத்தங்கரைக்கு வந்து வெளியிலே வந்த நண்டு களையும் விழுங்கும். நாம் பப்பர்மெட்டுத் தின்கிறது போல அந்த நண்டுகளைத் தின்று ருசி பார்க்கும். நண்டு தின்பதில் அதற்கு அதிகப் பிரியம் வந்து விட்ட து.

ஒரு நாள் ஒரு கலைமான் குட்டியைப் பிடித்து அது விழுங்க ஆரம்பித்தது; உடம்பை யெல்லாம் விழுங்கிவிட்டது. அந்த மான் குட்டியின் தலையில் கிளைகளோடு கூடிய கொம்பு இருந்தது. அதைப் பாம்பினுல் விழுங்க முடியவில்லே, அது உள்ளே போகாமல் வாய்க்குள்ளே நின்று விட்டது. கூர்மை யாக இருந்ததால் வாயைக் கிழித்து விட்டது. ரத்தம் கொட்டியது. அந்த வலியை அதனல் பொறுக்க முடியவில்லை.

மெதுவாக ஒரு மரத்தடிக்குப் போய் அந்த மரத்தோடு வாயைத் தேய்த்தது, அப்போதும் மான்கொம்பு வெளியே வரவில்லை. பாம்பு தவியாய்த் தவித்தது,

அப்போது ஒரு நரி வந்து பாம்பைப் பார்த்தது. "என்ன அண்ணே, இப்படி வாயெல்லாம் ரத்தம் ? என்று கேட்டது. ... -

"தம்பி, தெரியாமல் ಹಶಿಲLDrir രൂ-4തl. விழுங்கினேன். கொம்பை விழுங்க முடியவில்லை;

ந.பி.-4