பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நல்ல பிள்ளையார்

"தினமும் நிறைய நண்டுகள் வருவதில்லை, அண்ணே. சில நாள் மிகவும் குறைவாகவே வருகின்றன. நீயும் நண்டை விழுங்க வந்து விட்டால் நான் என்ன செய்வேன்!” என்று அழாக் குறை யாக நரி சொன்னது.

"அதெல்லாம் முடியாது; நானும் சாப்பிடத் தான் சாப்பிடுவேன்' என்று முரட்டுத்தனமாக மலைப்பாம்பு சொன்னபோது, நரிக்கு அழுகையே வந்து விட்டது. அதனுல் என்ன செய்ய முடியும் ? பாவம் !

மற்ருெரு நாள் அந்த மலேப் பாம்பு ஒரு முயலைப் பற்றி விழுங்கப் போயிற்று. அந்த முயல் ஒரு முள் புதருக்குள் ஒடி ஒளிந்து கொண்டது. பாம்புக்கு நிரம்பப் பசி, சரசரவென்று அந்தப் புதருக்குள் நுழைந்தது. முயலேப் பற்றிக்கொண்டு விழுங்க ஆரம். பித்தது. முள்ளுச் செடியை முயல் விடவே இல்லை, பசி வேகத்தில் பாம்பு முயலே இழுத்து விழுங்கும் போது அந்த முள்ளுச் செடியின் கிளேயும் ஒடிந்து அதன் வாய்க்குள் போயிற்று. கூர்மையான முள் ஆகையால் பாம்பின் வாயை அது குத்திவிட்டது. அதை வெளியிலே கக்க முடியவில்லே,

வெளியிலே வந்து திணறிக் கொண்டிருந்தது, பாம்பு. அந்த நரி வந்தால் இந்த முள்ளே எடுக்கச் சொல்லலாமே என்று அது நினைத்துக் கொண்டிருந்த போது, நரியே வந்து விட்டது.