பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நல்ல பிள்ளையார்

வழியில்லாமல் அது நரியைக் கூப்பிட்டு :அலறியது; 'தம்பி, இப்போது என்ளேக் காப்பாற்றிவிடு. உன் வழிக்கே வரமாட்டேன். உனக்கு எது வேண்டு மாலுைம் தருகிறேன். சாமி சத்தியமாகச் சொல்கிறேன், நீ என் வாலைப் பிடித்துக் கரையில் இழுத்து விடு' என்று புலம்பியது.

நரி சிறிது நேரம் பாம்பின் தவிப்பைப் பார்த்து நின்று கொண்டிருந்தது. 'தம்பி, நீ சும்மா இருக் கிருயே! என்னேக் காப்பாற்றிவிடு; உன் காலில் விழுகிறேன், எப்படியாவது:என்னைக் கரையேற்று' என்று உரத்த குரலில் அழுதது மலேப்பாம்பு. -

நரிக்கு மனசு இரங்கி விட்டது. குளத்தில் இறங்கி நீந்திக்கொண்டே வந்து பாம்பின் வாலே வாயில் பற்றிக்கொண்டது. மெதுவாகக் கரைக்குப் போய், பாம்பின் உடம்பு முழுவதையும் கரையில் இழுத்து விட்டது. கரைக்கு வந்தவுடன் பாம்பு சிறிது நேரம் மயக்கமாக அப்படியே கிடந்தது. பிறகு கண் விழித்தது. நரியைப் பார்த்து, 'தம்பி, நீ என் உயிரையே காப்பாற்றினுய். இனிமேல் நீ எது கேட்டாலும் தருகிறேன்; எனக்குச் சாப்பிடக் கிடைக்கிறதை நீ கேட்டாலும், நான் சாப்பிடாமல் உனக்கே கொடுத்து விடுகிறேன், இனிமேல் நமக்குள்ளே பேதமே வேண்டாம். எனக்கு நல்ல