பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திரப் பெட்டி 59.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு சாமியார் வந்தார், வழக்கம்போல் கந்தன் அவரை வணங்கினன். அவருக்கு விசிறின்ை. தாகத்துக்குத் தண்ணிர் வேண்டுமானுல் கொண்டு வந்து கொடுத்தான். அவனுடைய பணிவைக் கண்டு அவனிடம் சாமியாருக்குப் பிரியம் ஏற்பட்டது, "அப்பா, உன் பேர் என்ன?’ என்று கேட்டார். கந்தன்” என்ருன். "என்ன படித்திருக்கிருய்?’ என்று கேட்டார். பதில் சொல்ல அவனுக்கு வெட்கமாக இருந்தது. ஆளுலும் சாமியாரிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டுமென்று எண்ணி, எனக்குச் சரியாகப் படிப்பு வரவில்லை. நாலாவதுக்கு மேல் போக வில்லை” என்று சொன்னன்.

'நீ என்ைேடு வருகிருயா ? உன் அம்மா அப்பா உன்னே விடுவார்களா ?’ என்று கேட்டார் சாமியார். . . . .

"நான் வர இஷ்டந்தான், அப்பா அம்மாவைக் கேட்டுப் பார்க்கிறேன்” என்று சொல்லி, அவர்களைக் கேட்டான், இங்கே இருந்து வீண் பொழுது போக்குவதைவிட எங்கேயாது போய் வேலையோ வெட்டியோ செய்து பிழைத்துக் கொள்ளட்டும் என்று எண்ணி அவர்கள் அனுமதி கொடுத்து விட்டார்கள். . . . . . . .

சாமியார் அவனைக் கூட்டிக் கொண்டு போளுர். அவர் ஒரு காட்டில் ஆசிரமம் கட்டிக் கொண்டு வாழ்கிறவர். அங்கே அழைத்துக் கொண்டு