பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நல்ல பிள்ளையார்

போனர். கந்தன் அவருக்கு வேண்டிய பணிவிடை களேயெல்லாம் செய்தான்.

அந்தச் சாமியார் மந்திரம் தெரிந்தவர். எது வேண்டுமானலும் இருந்த இடத்திலிருந்தே வர வழைக்கிறவர். இந்த விஷயம் மு. த லி ல் கந்தனுக்குத் தெரியாது. அந்த ஆசிரமத்தில் அதிகச் சாமான்கள் இல்லை. சாமியார் உட்கார்ந்து தவம் பண்ணுகிற புலித்தோல் இருந்தது. இரண்டு மூன்று காவியாடைகள் இருந்தன. அவர் கழுத்தில் ருத்திராட்ச மாலே இருந்தது. ஒரு குடுவையில்

திருநீறு இருந்தது. அதில் ஏதாவது இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டான்.

இவர் எப்படிச் சாப்பிடுவார் ? யாராவது சாப்பாடு கொண்டு வந்து தருவார்களா ? என்று யோசித்தான்.

வந்த முதல் நாள் சாப்பிட வேண்டிய நேரத்தில் சாமியார் கந்தனை அழைத்து, 'இந்தா, இந்தச் செம்பில் தண்ணிர் கொண்டு வா' என்று வெளியே அனுப்பினர். அவன் சிறிது தூரத்தில் ஓடிய ஆற்றிலிருந்து தண்ணிர் எடுத்து வந்தான். வந்து பார்த்த போது இரண்டு இலகளில் பருப்பு பாயசத் தோடு சாப்பாடு இருந்தது. இதை யார் கொண்டு வந்து வைத்தார்கள் ? என்று யோசித்தான். சாமி யாரைக் கேட்கலாம் என்று நினைத்தான். பிறகு, :அப்படியெல்லாம் கேட்டால் சாமியார் ஏதாவது