பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'62 நல்ல பிள்ளையார்

வந்தன. அவர் ஒரு மந்திரக் கோலே வைத் திருந்தார். அந்தக் கோலில்ை தகரப் பெட்டியைத் தட்டி, சூ சுவாகா இரண்டு மாம்பழம் வேண்டும். என்றல் உடனே அந்தப் பெட்டி திறந்து கொள்ளும். அதில் இரண்டு மாம்பழங்கள் இருக்கும். சாமியார் எடுத்துக் கொள்வார். தினந்தோறும் சாப்பாடு கூட இப்படித்தான் கிடைக்கிறது என்று கந்தன் தெரிந்து கொண்டான்,

சாமியார் அவனுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுத்தார். பல நீதிகளே உபதேசம் செய்தார். "கடவுளே நம்பு. அதிக ஆசைப் படாதே ! யாரிடமும் அன்பாக இரு' என்று நீதியுரைகளைச் சொன்னர். -

சில காலம் கழித்துக் கந்தனுக்குத் தன் அப்பா அம்மாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. சாமியாரிடம் சொன்னன். போய் விட்டு வா அப்பா என் ஆசீர்வாதங்களே அவர் களிடம் சொல். வெறுங்கையோடு போகாதே, அவர்களுக்கு வேட்டி, புடைவை தருகிறேன். அவற்றைக் கொண்டுபோய்க் கொடு”என்று வேட்டி, புடைவை, பழம் எல்லாம் கொடுத்து அனுப்பினர்.

கந்தன் ஊருக்குப் போய் அப்பா அம்மாவைப் பார்த்தான். அவர்கள் அவனப் பார்த்தபோது

ஆச்சரியப்பட்டுப் போர்ைகள். அவன் மொழு மொழு என்று வளர்ந்திருந்தான். அவன் கொண்டு