பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நல்ல பிள்ளையார்

"ஓகோ குட்டிச் சாத்தான் வேலை போலிருக் கிறது !’ என்று அப்பா சொன்னர்.

"சாத்தானும் இல்லை; தீத்தானும் இல்லை. அவர் தெய்வம் போன்றவர் 1’ என்று சொல்லிக் கன்னத் தில் போட்டுக் கொண்டு சாமியாரை நினைத்துக் கும்பிட்டான். அப்பாவின் பைத்தியக்காரத்தன மான பேச்சைக் கேட்டு அவன் மனம் வருந்தியது. அதற்குப் பரிகாரமாகத்தான் தன் கன்னத்தில் போட்டுக்கொண்டான்.

"அப்படியா ? ஆச்சரியமாக இருக்கிறதே! அப்படியானுல் நான் ஒரு முறை சாமியார் ஆசிரமத்துக்கு வந்து பார்க்கலாமா ?' என்று கேட்டார் அப்பா.

“எதற்கும் சாமியாரைக் கேட்டுக் கொண்டு வந்து உங்களை அழைத்துக் கொண்டு போகிறேன்.”

சரி, சரி, அடுத்த முறை வரும்போது எனக்கு ஒரு தங்கச் சங்கிலி வாங்கி வா. என் கழுத்து மூளியாக இருக்கிறது. உங்கள் அப்பாவால் ஒன்றும் செய்ய முடியாது. நீ வாங்கித் தந்தால், என் பிள்ளே சம்பாதித்துக் கொடுத்தது என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வேன்' என்று சொன்னுள் அம்மா.

"சரி' என்று சொல்லி விடை பெற்றுச் சென்ருன் கந்தன் -