பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திரப் பெட்டி 6s

மூன்று மாதம் கழித்து மறுபடியும் அப்பாவைப் பார்த்து வரலாம் என்று புறப்பட்டான். புறப் படும் போது சாமியாரிடம், “எங்கள் அம்மா தங்கச் சங்கிலி வேண்டுமென்று கேட்டாள்" என்று சொன்னன்.

"அப்படியா ? கொடுத்துவிட்டு வா" என்று மந்திரப் பெட்டியிலிருந்து ஒரு சங்கிலியை வருவித்துக் கொடுத்தார். பிறகு கந்தன், ‘சாமி, அவர்கள் ஒரு முறை இங்கே வந்து உங்களைத் தரிசிக்க வேண்டு மென்று ஆசைப்படுகிருர்கள்' என்பதை யும் சொன்னுன். - -

சாமியாருக்கு அதைக் கேட்டவுடன் சிரிப்பு வந்தது. "சரி, அழைத்துக்கொண்டு வா; இரண்டு நாள் இருந்து விட்டுப் போகட்டும்?’ என்று சொல்லித் தங்கச் சங்கிலியோடு அவனே அனுப்பி வைத்தார். - - -

இரண்டு நாள் கழித்துக் கந்தன் தன் தாயார் தகப்பனரோடு அங்கே வந்து சேர்ந்தான். மிகவும் சிறிய ஆசிரமத்தில் சாமியார் இருப்பதை அவர்கள் கண்டார்கள். இவருக்குத்தான் எது வேண்டு மானுலும் கிடைக்கிறதே ! ஒரு பெரிய மாளிகையில் இருக்கப்படாதோ ? இந்தக் குடிசையில் ஏன் இருக் கிருர்கள் ? என்று அவர்கள் நினைத்தார்கள்.

முதல் நாள் அவர்களை நீராடி விட்டு வரும்படி அனுப்பினர் சாமியார். திரும்பி வந்த போது எல்லோருக்கும் இலேபோட்டு உணவு பரிமாறி

ந. பி.-5