பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 நல்ல 196ir&тштrf

சாமியார் நிதானமாக நடந்ததை எல்லாம் கேள்வியுற்ருர், பிறகு அந்த மந்திரக் கோலேக் கந்தனிடம் தந்து, அப்பா வேண்டும் என்று கேள்' என்ருர். கந்தன் கண்ணேத் துடைத்துக்கொண்டு சாமியார் காலில் விழுந்து வணங்கி எழுந்து, மிகவும் பயபக்தியுடன் அந்தக் கோலால், “என் அப்பா வேண்டும்’ என்று பெட்டி மேல் தட்டினன். அவர்கள் எல்லோரும் ஆச்சரியத்தில் மூழ்கும்படி, பெட்டி திறந்தவுடன் அதிலிருந்து அவர் வெளியில் வந்து நின்ருர். நின்றவர் சாமியார் காலில் விழுந்து அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அழுதார். அம்மா தன் கணவர் வந்ததைக் கண்டு, செத்தவர் பிழைத்தது போல எண்ணி ஆனந்தக் கண்ணிர் விட்டாள்.

எல்லோரும் சேர் ந் து சாமியார் காலில் விழுந்தார்கள். சாமி, இனிமேல் நாங்கள் பேராசைப்பட மட்டோம், நீங்கள் கொடுக்கிறதை வாங்கிக் கொள்வோம். ஒன்றும் .ெ க ச டு க் கா விட்டாலும் சரியே! எங்கள் பிள்ளையைக் காப்பாற்று கிறீர்களே, அதுவே போதும்’ என்று மனமார அவரைத் துதித்து நின்ருர்கள். - "இனிமேல் கந்தனே அழைத்துப் போங்கள். அவன் படித்திருக்கிருன். நல்ல வேலை கிடைக்கும். என்னை மறந்து விடுங்கள்' என்று சொல்லி யாவருக்கும் விடைகொடுத்து அனுப்பினர் சாமியிார்.

-இ.