பக்கம்:நல்ல மனைவியை அடைவது எப்படி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

வனோடு பழகி உணரும் முறை சில ஜாதியினரிடம் இருக்கிறதாம்.

உலகத்தில் உள்ள விசித்திர வழக்கங்களுக்கு சில ஸாம்பிள்கள் கொடுத்தேன். கல்யாண விநோதங்களை எழுதுவது என் நோக்கம் அல்ல. பொருத்தம் பார்க்கிற விவகாரம் இந்த ரீதியில் இருந்தால், அப்புறம் ஏன் கல்யாண விளைவுகள் விபரீதமாகப் போகா?

யாராவது ஏதாவது சொன்னால் பெரிய அம்மாளாக அடித்துப் பேசுவார்கள்: 'எங்க காத்தில் எல்லாம் எங்களை மாப்பிள்ளை பிடத்திருக்குதா, பெண் பிடிச்சிருக்கா, என்று கேட்டா கல்யாணம் செய்தார்கள்? நாங்கள் குடும்பம் நடத்திக் குப்பை கொட்ட வில்லையா ? எல்லாம் பழகப் பழகச் சரியாகி விடும்.'

இந்த அலட்சிய மனோபாவம் நல்வாழ்வு வாழ வழி செய்யாது என்பதற்கு இன்றைய சமுதாய வாழ்வே சாட்சி.

***

எவனோ ஒருவனையும் எவளோ ஓருத்தியையும் வாழ்க்கைத் துணைவர்களாகச் சேர்க்க உதவுகிற கல்யாணம் சிறு பிள்ளை விளையாட்டல்ல. உடலும் உள்ளமும் ஒன்றுபடும் வாழ்க்கைப் பிணைப்பு அது. அத்துடன், இன்ப வாழ்வுக்கும் அமைதி ஆனந்தங்களுக்கும் உதவுகிற ஆத்மீகத் தொடர்பும் உடையது. ஆனால் காலப்போக்கில் கல்யாணம் இயந்திர ரீதியான சடங்கலாகி விட்டது. அனைத்தும் அர்த்தமற்ற வழக்கங்களாகி விட்டன.

பெண்ணிடமும் ஆணிடமும் உண்மையான அன்பும், புனிதப் பண்பும் மனித்ததுவமும், பலகுண நிறைவுகளுமிருப்பின் தாலி தேவையில்லை சடங்குகள் தேவயில்லை, 'தெய்வத்தில் சன்னிதி