பக்கம்:நல்ல மனைவியை அடைவது எப்படி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

யல்ல. இயற்கையான லெக்ஸ் அரிப்பு பரஸ்பரம் ஒரு மோகத்தையும், பார்வை துண்டுகிற ஸ்பரிசம், அணைப்பு, கலவி முதலிய பசிகளைத் தீர்த்துக் கொள்ள வேணும் என்கிற வேகத்தையும் ஈடு செய்வதில் தான்-அதற்குரிய சூழ்ச்சித் திட்டங்கள் வகுப்பதிலே தான்-அவர்கள் கவனம் போகும், அவள் இல்லாமல் தீராது எனும் காமப்பசியும், அவனை அணேயாமல் தீராது என்கிற வெறியும் தெய்வீகக் காதல் என்கிற போதையை உண்டாக்கிவிடும். அதனால் கல்யாணம் செய்ய முற்படுகிறார்கள். விலகி யிருந்தனால் எழுகிற மோகம் சீக்கிரமே தீர்ந்து விடுகிறது. அண்றாட வாழ்விலே குறுகிய இடத்தில் நெருங்கி வாழ நேர்வதும், உடலோடு உடல் ஒட்ட கிர்வாணமாகப் பழகச் சந்தர்ப்பம் ஏற்படுவதும் சகஜமானவுடன், உளத்தோடு உளம் ஒட்டவில்லை என்கி உண்மையை இருவரும் புரிந்து கொள்ளத் தாமதம் ஆவதில்லை. பிறகு என்ன ? கசப்பு...... வெறுப்பு சண்டை. ஊடல்...ஒடல் தான்! பிறகு, பிளவு. விவாகரத்து!

இது நாகரிகப் பாதை. நம் காட்டுப் பாதை தெரியாதா !

பெரும்பாலும் 'எல்லாம் வல்ல இறைவன் திருவருளை முன்னிட்டு சர்வ மங்களமும் கூடிய சுபயோக சுபதினத்தில் கல்ல முகூர்த்தம் பார்த்து பெரியோர்கள் நிச்சயித்து முடிக்கிற கல்யாணங்கள் அவர்களது ஆசை, பணம், சொத்து, அந்தஸ்து முதலிய போலிப்படாடோபங்களின் மீதே எழுவதால், என்ன விளைவுக்கு வழி செய்கின்றன?

'ஒடிப் போனவள்' கதையும், தொழிற்காரியைத் தேடிப் போகிறவன் கதையும் சர்வ சாதாரணமாவது தான் காண்கிற பலன்கள்.