பக்கம்:நல்ல மனைவியை அடைவது எப்படி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நல்ல மனைவியை அடைவது எப்படி?


‘மனைவி தாமரை போல. கண்ணிர் கூடினால், தாமரையும் கூடவே ஓங்கி மேல்பரப்பில் வந்து திகழ்கிறது. தண்ணிர் குறைந்தால், தாமரையும் தாழ்ந்து நீர்ப்பரப்பை அலங்கரிக்கிறது மனைவியும் வாழ்வின் ஏற்றத்திலும் தாழ்விலும் கணவனோடு ஒன்றி, வாழ்வைச் சிறப்பித்து தானும் மகிழ்கிறவள்’

இப்படிச் சொன்னார் ஒரு நண்பர். உவமை அழகாகக் தான் இருக்கிறது. வாழ்வின் உண்மை எல்லோருக்கும் இதேமாதிரித்தான் விளங்குகிறதா?

வாழ்வில் இனிமையும் சிறப்பும், மகிழ்வும் வளமும், அமைதியும் பற்றுதலும் தரவேண்டிய கல்யாணம் தனிமனித வாழ்வைமட்டுமல்ல; சமுதாய நலனையும், உயிர்க்குல நலனையும் பாதிக்கிற மகத்தான பிரச்சனையாகி விட்டது.

கல்யாணம் செய்து கொண்டவர்களில் பலர் 'ஏன் நாம் இந்தக் கல்யாணத்தைச் செய்து கொண்டோம் என்று வருந்துவது பலருமறிந்ததே. அவர்களின் மனக்கசப்பு மனைவி, குழந்தைகள் மீது வெறுப்பாக மாறுகிறது. அதனால் 'ஒழிஞ்சு போ; நாசமாகு; தொலை' என்று ஏச்சுமாரிகளும் உதைகளும் குடும்ப வாழ்விலே சர்வசாதாரண நிகழ்ச்சிகளாகின்றன.

ஏன்? ஒத்த குணமுடைய ஆணும்பெண்ணும் இணக்கப்படுவதில்லை கல்யாணத்தின் மூலம்.