பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10 நல்வழிச் சிறுகதைகள்
 

போலிருக்கிறது ! இத்தனை மீன்களில் ஒன்றைக் கூடப் பிடித்துத் தின்னவில்லை. இவ்வளவு சின்ன சின்ன மீனெல்லாம் அந்தக் கொக்குக்குப் பயப்படாமல் போகும் போது நான் ஏன் பயப்பட வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டு அதுவும் புறப்பட்டது.

மடைவாயை அந்தக் கொழுத்த மீன்குஞ்சு நெருங்கியது. திடீர் என்று அதன் மண்டையில் ஒரு குத்து விழுந்தது. அதற்குத் தலை சுழன்றது ; மயக்கம் வந்தது. அதே சமயம் கொக்கு அதைப் பிடித்துக் கொன்று தின்றது.

மறுபடியும் அந்தக் கொக்கு, இன்னொரு கொழுத்த மீன் எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டு மடைவாயின் கரையில் நின்று கொண்டிருந்தது.

கருத்துரை :- ஓடுகிற மீனையெல்லாம் ஓட விட்டு விட்டுப் பொருத்தமான மீன் வரும்போது சட்டென்று கொத்தித் தின்றுவிடும் கொக்கு ; அடக்கமாக உள்ளவர்கள் கொக்குப் போல் தகுந்த காலத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களே , அவர்களை ஏமாளிகள் என்று எண்ணிவிடக் கூடாது.