பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பொன்குடமும் மண்குடமும்

ர் ஊரில் இரண்டு பெண்கள் இருந்தார்கள் இருவரும் தோழிகள். அவர்கள் ஒன்றாகவே இருப் பார்கள்.

பள்ளிக்கூடம் போகும்போதும், சந்தைக்குப் போகும்போதும், ஊருணிக்கு நீர் மொண்டுவரச் செல்லும்போதும் இருவரும் ஒன்றாகவேச் செல்வார்கள்.

நீர் மொள்ளச் செல்லும்போது ஒருத்தி பொன்குடம் எடுத்து வருவாள். மற்றொருத்தி மண்குடம் எடுத்து வருவாள். நீர் மொண்ட பின் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் வீட்டுக்குத் திரும்பி வருவார்கள்.

ஒருநாள் இருவரும் நீர் தூக்கிக்கொண்டு தத்தம் வீட்டுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் சாலையோரத்தில் ஒரு கால்வாய் வெட்டிக் கிடந்தது.

அந்தக் கால்வாயைக் கண்டவுடன் ஒருத்தி கேட்டாள்: "தலையில் உள்ள குடத்தோடு இந்தக் கால்வாயைத் தாண்டவேண்டும். உன்னால் முடியுமா?”

அதற்கு மற்றொருத்தி பதில் சொன்னாள்: ‘'என்னால் முடியும். உன்னால்தான் முடியாது.”