பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18 நல்வழிச் சிறுகதைகள்
 

தாமரைக் குளத்துக்குத்தான் நான் போகிறேன். நீங்களும் வருகிறீர்களா ?என்று கேட்டது. அன்னப் பறவை.

"அவ்வளவு அழகான குளமா ? அப்படியானால் வருகிறேன்,” என்று காகமும் அன்னத்துடன் புறப்பட்டது.

அவை போகும் வழியில் காற்றில் அழுகிய பிணத்தின் நாற்றம் கலந்து வந்தது. காட்டுப் புறத் தில் ஒரிடத்தில் ஒரு கழுதை செத்துக் கிடந்தது. செத்து நான்கைந்து நாளாகிவிட்டபடியால் அது அழுகி நாற்றமெடுத்தது. காற்றில் வந்த அந்த நாற்றத்தை உணர்ந்ததும் காகம் அன்னத்தை நோக்கி "அன்னம்மா, தாமரைக் குளத்திற்கு நீ போ. நான் வரவில்லை" என்று கூறி விட்டுப் பறந்தது. நேராகக் கழுதை அழுகிக் கிடந்த இடத்திற்குச் சென்றது. அழுகிய பிணத்தைக் கொத்தித் தின்று கொண்டே, “இந்த இன்பம் கிடைக்குமா தாமரைக் குளத்தில்” என்று தன் மனதுக்குள்ளேயே கூறிக் கொண்டது.

கருத்துரை :- அன்னம் தாமரைக் குளத்தை நாடுவது போல் கற்றோரைக் கற்றோர் விரும்புவர் காக்கை அழுகிய பிணத்தை விரும்புவது போல், தீயோரைத் தியோரே விரும்பிச் சேர்வர்.