பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20 நல்வழிச் சிறுகதைகள்
 

பாதை இருந்தது. சிறிது நேரம் ஒய்வெடுத்துக் கொள்ளலாம் என்று நீர்ப்பாம்பு அந்தப் பாதையின் மீதே படுத்துக் கொண்டது. நாகப்பாம்போ புற்களின் ஊடே சென்று மறைவாகப் படுத்துக் கொண்டது.

"ஏன் போய் ஒளிந்து கொள்கிறாய் ?’ என்று நீர்ப்பாம்பு கேட்டது.

"இந்த ஒற்றையடிப் பாதையில் மனிதர்கள் வருவார்கள். கண்டால் அடித்துக் கொன்று விடுவார்கள்" என்றது நாகப்பாம்பு.

"நான் எத்தனையோ முறை அவர்கள் போகும் பாதைகளில் படுத்திருக்கிறேன். என்னை யாரும் அடிக்கவில்லையே" என்று வியப்புடன் கூறியது நீர்ப்பாம்பு.

உன்னிடம் நஞ்சில்லை. என்னிடம் நஞ்சு இருக்கிறது நான் கடித்தால் அவர்கள் இறந்து விடுவார்கள். அதனால் என்னை அவர்கள் பகையாகக் கருதுகிறார்கள். கண்ட இடத்தில் கொன்று விடுவார்கள்’’ என்று கூறி, மறைவான இடத்தி லேயே படுத்துக் கொண்டது, நாகப்பாம்பு.

கருத்துரை :- நல்ல மனம் படைத்தவர்கள் அச்சமின்றி வாழ்வார்கள். நெஞ்சில் வஞ்சங் கொண்டவர்கள்தாம் ஒளிந்து மறைந்து வாழ்வார்கள். நஞ்சுள்ள நாகப்பாம்பு போல் அவர்கள் மனித இனத்தின் பகையாவார்கள்.