பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


மாங்காயும் கைக்கோலும்

ரு குருடன் தட்டித் தடவிக்கொண்டே ஒரு சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். வெயில் கொடுமையாக எரித்துக் கொண்டிருந்தது. எங்காவது நிழல் கிடைக்குமா என்று தேடி அவன் சென்று கொண்டிருந்தான். ஒரிடத்திற்கு வந்ததும் குளிர்ந்த நிழல் தன் மீது படுவதை அவன் உணர்ந்தான். கைக்கோலினால் தட்டிப் பார்த்து அந்த இடத்திலே ஒரு மரம் இருப்பதை அறிந்து கொண்டான். அந்த மரத்தின் அடியிலே போய் உட்கார்ந்தான்.

சிறிது நேரம் சென்றபின் தொப்பென்று ஏதோ விழுந்த ஓசை கேட்டது. ஒலி வந்த இடத்தை நோக்கி நகர்ந்தான். குருடன் தரையைக் கையால் தடவித் தடவி ஒரு காயைக் கண்டெடுத்தான். மூக்கின் அருகில் கொண்டு சென்றபோது அது ஒரு மாங்காய் என்று அறிந்து கொண்டான். அந்த மாங்காய் சிறிதும் புளிப்பில்லாமல் பச்சரிசி போல் சுவையாக இருந்தது.

குருடன் அதைக் கடித்துத் தின்றான். இன்னொரு மாங்காய் தின்ன வேண்டும் போல் இருந்தது.