பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
32 நல்வழிச் சிறுகதைகள்
 

கூடக் கொடுக்க மாட்டான். திரும்ப வசூல் ஆகுமோ ஆகாதோ என்று பயந்து அவன் அந்த வழக்கமே வைத்துக்கொள்ளவில்லை.

துன்பத்தையெல்லாம் சொல்லித் தொழுது அழுது கேட்டாலும் அவனிடமிருந்து ஒரு சல்லிக் காசுகூடப் பெற முடியாது.

அந்தப் பணக்காரன் வீட்டுக்குள் ஒரு நாள் இரவு கொள்ளைக்காரன் ஒருவன் புகுந்தான். நேராகப் பணக்காரன் படுத்திருந்த அறைக்குச் சென்றான். ஒரு கையில் தீவட்டியும் மறு கையில் வெட்டரிவாளும் வைத்திருந்த அந்தக் கொள்ளைக் காரன் அவனைத் தட்டியெழுப்பினான்.

செல்வன் திருடனைக் கண்டு திடுக்கிட்டான். திருடன் இரும்புப் பெட்டிச் சாவியைக் கேட்டான். அவன் கொடுக்க மறுத்தான். வெட்டரிவாளால் காலிலும் கையிலும் இரண்டு மூன்று இடங்களில் வெட்டினான் திருடன்.வலி தாங்க முடியாமல் பணக் காரன் அழுதான். கடைசியில் உயிருக்குப் பயந்து அவன் இரும்புப் பெட்டிச் சாவியைக் கொடுத்து விட்டான். இருந்த பணம் முழுவதையும் கொள்ளைக்காரன் மூட்டைக் கட்டிக்கொண்டு போய் விட்டான்.

பணக்காரன் அமுது கொண்டிருந்தான். அவனைத் தேற்ற யாரும் வரவில்லை.

கருத்துரை :- அழுது தொழுது கேட்டாலும் இரக்கப்பட்டுச் சிறிது பொருள் கொடுக்காதவர்கள், அடித்து உதைத்துக் கேட்பவர்களுக்குப் பயந்து இருப்பதையெல்லாம் கொடுத்து விடுவார்கள்.