பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இளைஞனும் பெரியவரும்

ர் இளைஞன் சாலை வழியாகப் பாடிக் கொண்டே சென்றான். அவன் குரல் இனிமையாக இருந்தது. ஆனால், அவன் பாடிய பாட்டென்னவோ நன்றாயில்லை. அதில் பொருளும் இல்லை அழகும் இல்லை. வழியில் ஒரு பெரியவர் எதிர்ப்பட்டார். “தம்பி, இந்தப் பாட்டெல்லாம் ஏன் பாடுகிறாய்? உன் குரலே நன்றாயிருக்கிறது. இசையை மட்டும் உன் வாய் அசை போட்டாலே அழகாக இருக்கும். இந்தப் பாட்டைப் பாடி ஏன் உன் குரல் அழகையும் பாழ்படுத்திக் கொள்கிறாய்?’’ என்று கேட்டார் பெரியவர்.

அவன் அவர் அறிவுரையை இலட்சியம் செய்ய வில்லை. தன் போக்கில் பாடிக்கொண்டே சென்றான். நேராகச் சூதாடும் இடத்திற்குச் சென்றான். கையில் இருந்த பொருளையெல்லாம் சூதாடித் தோற்றுவிட்டு இளைஞன் திரும்பி வந்தான். திரும்பி வரும்போது அவன் பாடிக் கொண்டு வரவில்லை. வழியில் இருந்த ஒரு மரத்தடியில் களைப்பாற உட்கார்ந்தான்.

அதே மரத்தடியில் அந்தப் பெரியவர் ஒரு புறத்தில் இருந்தார். இளைஞன் கவனிக்கவில்லை.

சிறிது நேரத்தில் மற்றொரு ம னின் அவவழியாக வந்தான். அவனும் களைப்பாறு வதற்காக மரத்தடிக்கு வந்தான். இளைஞன் அருகில் வந்து உட்கார்ந்தான்.