பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கடலும் காற்றும்

காற்றரசன் வானமண்டலத்திலேயே வேகமாகச் சென்று கொண்டிருந்தால் . அப்போது, அவன் பார்வை நிலத்தின் பக்கம் திரும்பியது. பயிர்கள் செடி கொடிகளெல்லாம் வாடிக் கிடந்தன. மெல்லக் கீழே இறங்கி வந்தான்.

"நீங்களெல்லாம் ஏன் வாடிக் கிடக்கிறீர்கள் ? என்ன நேர்ந்தது ?’ என்றான் காற்றரசன்.

"அரசே. ஏரி குளமெல்லாம் நீர் வற்றிப் போய் விட்டன. எங்களுக்கு வேண்டிய தண்ணிர் கிடைக்கவில்லை. அதனால்தான் ஒரே வாட்டமாய் வதங்கிக் கிடக்கிறோம்’ என்று அவை மறுமொழி கூறின.

அவற்றின் குரல் பரிதாபமாயிருந்தது ! அவற்றின் நிலை ஒரே சோகக் காட்சியாயிருந்தது. "விரைவில் உங்கள் துன்பத்தைப் போக்குகிறேன்" என்று சொல்லிவிட்டுக் காற்றரசன் புறப்பட்டான்.

சிறிது தூரம் சென்றவுடன், கீழே ஒரு பெரிய நீர்ப்பரப்பைக் கண்டு இறங்கி வந்தான். கடலரசனைக் கண்டான்.

"நண்பா, உன்னிடம் நீர் நிறைய இருக்கிறதே ! சிறிது அளவு பயிர் பச்சைகளுக்குக் கொடுத்து உதவுகிறாயா" என்று காற்றரசன் கேட்டான்.