பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



48 நல்வழிச் சிறுகதைகள்

நாரை. தன்னிடம் உள்ள கறையை நீக்கிக் கொள்ளாமல் உலகைச் சூழ்ந்துள்ள இருளை ஒட்டப் புறப்பட்டு விட்டதே இந்த நிலவு இதன் கருத்து என்ன என்று அறிய நாரை ஆசைப் பட்டது.

அது நிலாவை நோக்கிப் பறந்தது. எவ்வளவு உயரம் பறந்தும் அதனால் நிலாவை அடைய முடிய வில்லை ; போகப் போக நிலா மேலும் மேலும் தொலைவில்தான் இருந்து கொண்டிருந்தது.

நிலாவை நெருங்க முடியாது என்று கண்டு கொண்ட நாரை, அருகில் காற்றில் தவழ்ந்து சென்று கொண்டிருந்த ஒரு மேகத்தைப் பார்த்தது. மேகமே, நிலா தன்னிடமுள்ள கறையைப் போக்கிக் கொள்ளாமல், உலகில் உள்ள இருளைப் போக்குகிறதே ! இதன் கருத்து என்ன ?என்று கேட்டது.

“நாரையே, உயர்ந்த பெரியோர்கள் தங்கள் குறையைக் காட்டிலும் பிறருடைய குறையை நீக்குவதே முதற்கடமை என்று நினைப்பார்கள். அது போன்றதுதான் நிலாவின் இயல்பு !’ என்றது மேகம். நிலாவின் உயர்ந்த தன்மையை வியந்து பாராட்டிக் கொண்டே நாரை உலகு நோக்கி இறங்கி வந்தது.

கருத்துரை :- தன் துன்பத்தைக் காட்டிலும் பிறர் துன்பத்தைப் பெரிதாக நினைத்து அதைப் போக்க உதவி செய்வதே நல்லோர் இயல்பாகும்.