பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50 நல்வழிச் சிறுகதைகள்

வேலையாயிருக்கிறார். நீங்கள் திரும்பிப்போகலாம்” என்றான்.

முரடனுக்குக் கோபம் வந்தது. சீற்றத்துடன் குடிசையினுள் நுழைந்தான்.

"வேலையற்றவனே, வெளியே போ! வீணாக என்னைத் தொந்தரவு செய்யாதே!” என்று உரத்த குரலில் கூறினான் மணியன்.

முரடன் அயர்ந்து நின்று விட்டான்.

"போகிறாயா இல்லையா?" என்று மீண்டும் மணியன் முழங்கினான்.

அவன் முழக்கத்தில் வெளிப்பட்ட உறுதி முரடனைக் கலங்க வைத்தது. எதிர்பாராத அதிர்ச்சியடைந்தான். பேசாமல் திரும்பி விட்டான்.

மணியன் நிமிர்ந்து பேசக் காரணம் என்ன என்று ஆராய்ந்தான் முரடன்.

அந்த ஊருக்குப் புதிதாகக் குடி வந்த குத்துச் சண்டை வீரன், மணியன் குடிசையை அடுத்த குடிசையில்தான் குடியிருந்தான். அவன் மணியனுக்கு நண்பனாகி விட்டான். அவன் ஆதரவு தனக்கு இருக்கிறதென்ற உறுதியில்தான் மணியன் துணிந்து பேசினான். இனி மணியனிடம் தன் மிரட்டல் பலிக்காது என்று தெரிந்து கொண்டான் முரடன்.

கருத்துரை :-வலிமையுள்ளவர்களின் துணையைப் பெற்றால் வலிமையற்றவர்களுக்குத் துணிச்சல் வந்துவிடும்.அவர்கள் பிறருக்கு அஞ்ச வேண்டியதில்லை.