பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நோயும் குணமும்

மாரிவளம் என்ற ஒர் ஊர் இருந்தது. அவ்வூரில் சாத்தப்பர் என்று ஒரு வணிகர் இருந்தார். சாத்தப்பர் பரம்பரைச் செல்வர். தம் பாட்டன்மார் ஈட்டிய பொருளுக்கு மேல் தம் உழைப்பால் பெரும் பொருள் ஈட்டினார். மாரிவளத்திலேயே, ஏன் அந்த வட்டத்திலேயே அவர்தான் பெரிய செல்வர். அவருக்கு இருந்த நிலபுலன்களையும், கட்டடங்களையும் நகைகளையும் பிற சொத்துக்களையும் சேர்த்துக் கணக்குப் பார்த்தால் ஐந்து கோடிக்கும் மேல் தேறும் என்று கூறுவார்கள்.

நாடெங்கும் அவருக்குப் பல தொழில்கள் நடைபெற்று வந்தன.

அவரிடம் முருகன் என்ற ஓர் ஏழைப் பையன் எடுபிடியாக வேலை பார்த்து வந்தான். அவனுக்குச் சாத்தப்பர் மாதம் இருபது ரூபாய் 3 சம்பளம் கொடுத்து வந்தார்.

அந்த முருகன் நல்ல பையன். எனவே சாத்தப்பர் அவனைத் தொடர்ந்து வேலைக்கு வைத்துக் கொண்டார்.

ஒருநாள் முருகன் வேலைக்கு வரவில்லை. சாத்தப்பர் அன்று கவனிக்கவில்லை.

இரண்டாவது நாளும் அவன் வேலைக்கு வராமற் போகவே சாத்தப்பர் ஓர் ஆளை முருகன் வீட்டுக்கு அனுப்பி விவரம் கேட்டு வரச் சொன்னார்.