பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தேனும் வேம்பும்

ரு வண்டும் காகமும் வழியில் சந்தித்துக் கொண்டன.

வண்டுத் தம்பி! எங்கிருந்து வருகிறாய்” என்று கேட்டது காகம்.

"சோலையிலிருந்து” என்று பதிலளித்தது. வண்டு.

சோலையிலிருந்தா ? நானும் அங்கிருந்து தானே வருகிறேன். உன்னைக் காணவில்லையே ! நீ அங்கு என்ன செய்து கொண்டிருந்தாய் ?” என்று வினவியது காகம்.

"காக்கையண்ணா, சோலையிலே பூஞ்செடிகள் இருக்கின்றனவே, அந்தப் பக்கம்தான் நான் இருந்தேன். பூக்களிலே இருந்த தேனை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தேன்” என்று கூறியது. வண்டு.

தேனா ? அது எப்படியிருக்கும் ?’ என்று. கேட்டது காகம்.

தேன் என்றால் உங்களுக்குத் தெரியாதா ? தேன் என்று சொல்லும்போதே இனிப்பாக இருக்கிறதே. அது கூடத் தெரியவில்லையா ? தேன் மிக