பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
64 நல்வழிச் சிறுகதைகள்
 

"நான் கடனே வாங்கவில்லை. என்னை உங்களுக்குத் தெரியாதா ? எனக்குக் கடன் வாங்க என்ன தேவையிருக்கிறது !” என்று அடிபட்ட வலி வேதனையோடு பேசினார் ஆசிரியர் நமசிவாயம். அவர் பொய் பேசாதவர் என்பது பொன்னப்பர் அறிந்ததே.

கொல்லும் பார்வையோடு அவர் முரடனை நோக்கினார். "சந்தையில் ஐந்து ரூபாய் கொடுத்தேன். இப்போது இல்லை என்கிறாரே” என்றான் முரடன்.

நமசிவாயம் ஆப்பக்காரக் கிழவி வீட்டில் சாப்பிடுகிறார் என்பது யாவரும் அறிந்த செய்தி. அவர் சந்தைக்குப் போக வேண்டிய வேலையே இல்லை. முரடன் பொய் அம்பலமாகி விட்டது. பொன்னப்பர் அவனைக் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார்.

"பொன்னப்பரே, சமயத்தில் நீங்கள் வந்து காப்பாற்றாவிட்டால், அந்த முரடன் என்னைச் சாகடித்திருப்பான், பிறர் துயரம் தீர்க்க முன் வரும் உங்களைப் போன்ற வீரர்களால்தான் என்னைப் போன்ற அப்பாவிகள் பிழைத்திருக்கிறார்கள்” என்று நன்றி நிறைந்த சொற்களைக் கூறினார் ஆசிரியர் நமசிவாயம்.

கருத்துரை :- பெரியவர்கள், பிறர் துன்பத்தைத் தமக்கு வந்ததாகக் கருதி விரைந்து சென்று நீக்குவார்கள்.