பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68 நல்வழிச் சிறுகதைகள்

நெடுநேரம் நீந்திய பிறகு அவர்கள் கைகள் அலுத்துப் போயின. இனி என்ன செய்வதென்று வீரன் கலங்கினான். அப்போது அவ்வழியாக ஒரு மீன் பிடிக்கும் படகு வந்தது. வீரன் அதைக் கூவி அழைத்தான். படகில் இருந்தவர்கள், வீரன் வந்த பக்கம் படகைத் திருப்பி ஒட்டிவந்தார்கள்.

வீரன் படகில் ஏறிக்கொண்டான். அவர்களை வேண்டிக்கொண்டு சூரன் நீந்திவரும் பக்கமாகப் படகை ஒட்டச் சொன்னான்.

படகு சூரனை நெருங்கியதும், வந்து ஏறிக் கொள்ளும்படி வீரன் அவனைக் கூப்பிட்டான்.

"அக்கரையைக் காணாமல் நான் திரும்ப மாட்டேன்" என்று கூறிச் சூரன் மறுத்துவிட்டான்.

படகுக்காரர்கள் எவ்வளவோ கூறியும் சூரன் அவர்கள் சொல்லைக் கேட்கவில்லை. அவன் தன் போக்கில் நீந்திக்கொண்டே சென்றான். தங்கள் சொல்லை அவன் கேட்கவில்லை என்றதும், படகுக்காரர்கள் கரை நோக்கித் திரும்பினார்கள். சூரன் கையில் வலுவிருக்கும் வரை நீந்திக்கொண்டேயிருந்து கடைசியில் தண்ணிரில் மூழ்கி இறந்து போனான்.

படகில் திரும்பி வந்த வீரனைக் கடலில் அவ்வளவு தூரம் அஞ்சாமல் நீந்திச் சென்றதற்காக ஊர்மக்கள் பாராட்டிப் பேசினார்கள். திரும்பி வராமல் உயிர்விட்ட சூரனையோ அறிவில்லாதவன் என்று ஏசினார்கள். வீரன் தன் பரிசுப் பொருட்களுடன் திரும்பினான்.

கருத்துரை: - துன்பப்படுங் காலத்தில் கிடைக்கும் துணையை உதறித் தள்ளிவிடக் கூடாது.