பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6 நல்வழிச் சிறுகதைகள்
 

"ஏன், ஆச்சரியப்படுகிறீர்கள்? என்னையும் ஆடவிட்டுப் பாருங்கள். வாய்ப்புக் கொடுத்தால் தானே திறமை இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம்?’ என்று அடித்துப் பேசியது வான்கோழி.

மாநாட்டுத் தலைவர் பருந்து, அனுமதி கொடுத்து விட்டது.

வான்கோழி மேடையின்மீது ஏறியது. வால் போல் நீண்டிருந்த தன் சிறகுகளை விரித்துக் கொண்டு, அது நடனம் ஆடியது வேடிக்கையாக இருந்தது. எல்லாப் பறவைகளும் கேலி செய்து சிரித்தன. அவமானம் தாங்க முடியாமல் வான் கோழி மேடையை விட்டு இறங்கி ஓடிவிட்டது.

கருத்துரை :- மயில் ஆடுவதைப் பார்த்த வான்கோழி தானும் அதுபோல் ஆடமுடியும் என்று கருதியது. இது தவறு. கல்வியில்லாதவர்கள் கவிதை எழுத முயல்வது வான்கோழியின் செயல் போன்றதுதான்.