பக்கம்:நல்வழி நயஉரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடல் சூழ்ந்த இம் மண்ணுலகில், தண்ணீரின் தன்மை அது இருக்கும் நிலத்தின் அமைப்பாலும், உயர்ந்தவரின் உயர் பண்பு அவர் கொடுக்கும் கொடையாலும், கண்ணின் அழகு அழியாத அருள் பார்வையாலும், பெண்ணின் பெருமை கற்பு கெடாத உறுதியாலும் அருமை பெருமை உடையனவாய் அமைந்திருக்கும். (16)


முன்பு செய்த தீவினை இருக்கும்போது, விணே தெய்வத்தைத் திட்டுவதால், பெரிய செல்வ வாழ்வு வந்து விடாது. உலகில் பிறர்க்கு இடுவதால் பாவம் போகும் என அறிந்து அன்று இடாதவர்க்கு இன்று ஒன்றும் கிடைக்காது, வெறும் பானையில் எதுவும் மேலே பொங்கி வருவதில்லையே. (17)


பெற்றோர், உடன் பிறந்தோர், தம் நாட்டார் - தம் ஊரார், தமக்கு உற்ற உறவினர், விரும்பிய நண்பர்கள் ஆகியோருக்கு உதவாத கருமிகள், வேறு பிறர் புண்ணாகும்படித் தம்மை அடித்தால் அவர்கட்குக் கொடுப்பார்கள். தம்மோடு தொடர்புடையவர்கள் தம் காலிலும் விழினும் கொடுக்க மாட்டார்கள். (18)


வயிற்றின் பசிக்கொடுமையால் ஒரு நாழி அரிசி பெற நாம், பிறருக்குத் தொண்டு (சேவை) செய்தும், ஒரிடம் சென்று யாசித்தும், மிக்க நீரையுடைய கடல் கடந்து அக்கரை நாடு சென்றும், பொய்யாக நடித்தும், அரசியல் நடத்தி ஆண்டும், பாட்டுப்பாடியும் ஆக இவ்வளவும் செய்து பாழான உடம்பை இயக்குகிறோம். (19)


மார்பில் குவிந்த கொங்கையை விலைபகரும் விலைமாதரைக் கொண்டாடிக் கொடுக்கும் வாழ்க்கை, அம்மியைத் துணையாக உடம்பில் கட்டிக்கொண்டு ஆற்று வெள்ளத்தில் இறங்கிய செயலைப் போன்றதாகும். இச்செயல், இப்பிறவிக்கும் மறுபிறவிக்கும்கூட நல்ல தாகாது; பெரிய செல்வத்தை அழித்து, வறுமைக்கு விதை போட்டதாகும். (20)

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்வழி_நயஉரை.pdf/16&oldid=1289758" இலிருந்து மீள்விக்கப்பட்டது