பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{rh|10|மூதுரை முத்து

  நீரில் எத்தனையோ மீன்கள்

ஒடிக்கொண்டிருந்தாலும், தனக்கு உற்ற மீன் வருகிறவரை, கொக்கானது ஆடாமல் அசையாமல் காத்திருக்கும். அதுபோலவே, அடக்கமுடைய அறிஞர்களும் இருப்பர். அவர்களை அறிவற்றவர் என எண்ணி வெல்லுவதற்கு நினைப்பது பெரிதும் தவறாக முடியும். (16) குளத்தில் நீர் நிறைந்தபோது வந்திருந்தும், வற்றிய போது பறத்தோடியும் விடுகின்ற பறவைகளைப் போல , செல்வம் நிறைந்தபோது வந்திருந்தும், வறுமை வந்தபோது விலகியும் போய்விடுகின்ற மக்கள் ஒருபோதும் உறவின ராகார். அதே குளத்திலுள்ள கொட்டி, ஆம்பல், நெய்தல் கொடிகள் நீர் நிறைந்தபோதும், வற்றியபோதும் குளத்தி லேயே கிடந்து உழல்வதுபோல, எக்காலத்தும் ஒட்டியிருப் பவரே சிறந்த உறவினராவர். (17)

  பொன்னால் செய்த குடம் உடைவதில்லை. உமைந் தாலும் அது என்றும் பொன்னாகவே இருக்கும். அதுபோல : நன்மக்கள் கெட்டுப் போவதில்லை. கெட்டாலும் அவரி களின் சிறப்புக் குறையாது. ஒழுக்கம் தவறிய கீழ்மக்கள், கெட்டுப் போனால் அவர்கள் எதற்குப் பயன்படுவர்? ஆம்: மண்ணாற் செய்த குடம் உட்ைந்து போனால் அது எதற்கு பயன்படப் போகிறது? -                 (18)
 ஒரு படியை ஆழமான கடல் நீரில் அமுக்கி முகந்தாலும் அது நான்கு படி தண்ணிரை முகந்து கொள்ளாது. அது போல நிறைந்த செல்வமும், உயர்ந்த தலைவனும் ஒருத்திக்கு அமைந்திருந்தாலும், அவளது அறிவிற்கும் செயலுக்கும் மீறிய பயனை அவளால் ஒருபோதும் அடைந்து விட முடியாது.     (19)
   'உடன் பிறந்தார், சுற்றத்தார்' என எண்ணி அவர் களையே நம்பி இருந்துவிடாதே, நோய்கூட நம் உடன் பிறந்தே நம்மைக் கொன்று விடுகிறது. நம் உடன் பிறவா மல் காடுகளிலும், மலைகளிலும் பிறந்துள்ள மருந்துச் செடிகள் நம் பிணியைத் தீர்ப்பதுபோல, நமக்கு உதவி செய்யும் மக்கள் அயலாரிலும் பலர் இருக்கின்றனர்.       (20)