பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:Eh

    மூதுரை முத்து

நற்குண நற்செயல்களுடைய மனைவி வீட்டிலிருந்தால் அவ் வீட்டில் இல்லாத பொருள்கள் ஏதுமில்லை; எல்லாச் செல்வங்களும் இருப்பதாகவே கருதலாம். கடுஞ்சொற் களைச் சிடுசிடுப்பாகப் பேசிப் போராடுகிற மனைவியாக இருப்பாளேயானால், அவளிருக்கும் வீட்டுக்கு 'வீடு" என்ற பெயரிராது; புலி தங்கியிருக்கும் புதர்' என்றே ஆகிவிடும். (21)

"மடநெஞ்சமே! நீ நினைத்தபடியெல்லாம் நடந்துவிடும்’ என எண்ணி இறுமாந்திராதே! கற்பகத் தருவைச் சார்ந்த வர்களும் பயன் பெறாமல் திரும்புவதுண்டு. அது அவரவர் முன்னே செய்த செயலின் விளைவாகவே வந்து முடியும் (22)

கருங்கல் பிளவுபட்டுப் போனால், அது எவ்வகையிலும் திரும்ப ஒன்றுபடுவதில்லை. அதுபோலக் கயவர்களின் நட்பு பிளவுபடுமானால் அவர்கள் எவ்வகையிலும் திரும்ப ஒன்று படுவதில்லை, டொன்கட்டி பிளவுபட்டுவிட்டால் அது திரும்ப ஒன்றுபடுவதுபோல, நன்மக்களது நட்பு எப்போதாவது பிளவுபட்டாலும், திரும்ப ஒன்று சேர்ந்து விடும். அவர்களது கோபமும் நீரில் உண்டான வடுப்போல உட்னே மாறிவிடும்.(23)

சிறந்த தாமரை மலருள்ள குளத்தையே அழகிய அன்னம் விரும்பிச் சென்றடைகிறது. அதுபோல, கற்றறிந்த பெரியோர்களைக் கற்றறிந்த அறிஞர்களே விரும்பிக் சேர்வர். கல்வியறிவற்ற கீழ்மக்களை அத்தகைய கீழ் மக்களே சென்றடைவர். ஆம், கழுகும் காகமும் பிணத்தை யும் சுடுகாட்டையும் தானே சென்றடைகின்றன. (24)

தன்னிடத்தில் நஞ்சு இருப்பதை அறிந்தே நாகப்பாம்பு மறைந்து வாழ்கிறது. நஞ்சில்லாத நீர்ப்பாம்போ அச்ச மின்றி நீரில் வெளிப்படையாக வாழ்கிறது. அதுபோல மனத்தில் வஞ்சமுள்ள மக்கள் மறைந்து வாழ்வர். வஞ்ச மில்லா மக்கள் எவருக்கும் அஞ்சாமல், மறையாமல் வெளிப் படையாகயே வாழ்ந்து வருவர். (25)