பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூதுரை

13

            மூதுரை

இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றில்லை இல்லாளும் இல்லாளே யாமாயின் -இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில் புலிகிடந்த தூறாய் விடும். (21)

எழுதியவா றாமென் றிராமட நெஞ்சே கருதியவா றாமோ கருமம்-கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்திற் செய்த வினை. (22)

கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப் பொற் பிளவோ டொப்பாரும் போல்வரே-

                          விற்பிடித்து    நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே    சீரொழுகு சான்றோர் சினம்.             (23)

நற்றா மரைக்கயத்தில் நல்லன்ன சேர்ந்தாற்போல் காற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்றிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம். (24)

நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும் அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு-நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர் கரளார் கரவிலா நெஞ்சத் தவிர். (25)