பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

மூதுரை முத்து

       மூதுரை முத்து
   நாடாளும் மன்னனையும், நன்கு கற்றறிந்த புலவனை யும் சீர்தூக்கிப் பார்த்தால், மன்னனைவிட புலவனே அதிக சிறப்புடையவனாகத் தோன்றுகிறான். ஆம், மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு: கற்றோர்க்குச் சென்ற விட்மெல்லாம் சிறப்பு.                                          (26)
 கல்வியறிவற்ற மக்களுக்குக் கற்றறிந்தோரின் சொற்கள் எமனைப் போலத் துன்புறுத்தும், அறத்தின் வழியே நடக்க விரும்பாத மக்களுக்கு அறமே எமனாகத் தோன்றும். வாழை மரத்திற்கு அது ஈன்ற வாழைக்குலையே எமனாக முடியும். குடும்பத்திற்கு இசைய நடந்தொழுக விரும்பாத பெண் அவ்வீட்டிற்கே எமனாக வந்து முடிவாள்.                (27)
  சந்தனக் கட்டையானது அரைத்து அரைத்துத் தேய்ந்து போனாலும், அதன் மணம் சிறிதும் குறைவு படாது. அது போல, உயர்ந்து சிறந்து வாழ்ந்த பெருங்குடி மக்கள் ஒழுக்கால் கெட்டுப் போனாலும், அவர்களிடத்திலுள்ள செல்வம் குறையுமே தவிர, அவர்களின் மனம் குறைவ தில்லை.                              (28)
    அளவுகடந்த சுற்றத்தினரும், உயர்ந்த குலமும், சிறந்த தோற்றமும், பிற நலன்களும், செல்வம் வந்து சேரும்போது தானே வந்து சேர்ந்துவிடும். அது பிரிந்து போகும்போது அவை அனைத்தும் தானாகவே ஒழிந்துபோய்விடும்.                    (29)
  செழித்து வளர்ந்த மாமானது. தன்னை வெட்டி வீழ்த்துகின்ற மனிதனுக்கு, அது தரையில் வீழும்வரை குளிர்நிழலைத் தந்து அவன் களைப்பைப் போக்கும். அது போல, சிறந்த அறிஞர்கள் தமக்கு தீமை செய்து வருபவர்க் குத் தாம் சாகும்வரை நன்மைகளையே செய்து மடிவர்          (30)