பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூதுரை

15

 மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன்சிறப்புடையன்-மன்னனுக்குத் தன்றேசம் அல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச் சென்றவிட மெல்லாஞ் சிறப்பு.

(26)

 கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தோர் சொற் கூற்றம்
அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம்-மெல்லிய வாழைக்குத் தானின்ற காய்கூற்றம் கூற்றமே இல்லிற் கிசைந்தொழுகாப் பெண்.

(27)

 சந்தன மென்குறடு தான் தேய்ந்த காலத்தும் கந்தம் குறைபடா தாதலால்-தந்தம் தனஞ்சிறிய ராயினும் தார்வேந்தர் கெட்டால் மனஞ்சிறிய ராவரோ மற்று.

(28)

 மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல உருவும் உயர்குலமும் எல்லாம்-திருமடந்தை ஆம்போ தவளோடும் ஆகும் அவள்பிரிந்து
போம்போ தவளோடும் போம்.

(29)

 சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை ஆந்தனையுங் காப்பர் அறிவுடையோர்-மாந்தர் குறைக்குந் தனையும் குளிர்நிழலைத் தந்து மறைக்குமாம் கண்டீர் மரம்.

(30)