பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நல்வழி 17

புண்ணியமாம் பாவம்போம்

      போனநாள்செய்தவ்வை மண்ணிற் பிறந்தார்க்கு 
 வைத்தபொருள்-எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை எச்சமயத் 
              தோர்சொல்லும் தீதொழிய நன்மை செயல்.  (31)

சாதி இரண்டொழிய வேறில்லை

                 சாற்றுங்கால் நீதி வழுவா நெறி முறையின்- 
                  மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் 
               இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி.     (32)

இடும்பைக் கிடும்பை யியலுடம்பி

                      தன்றே இடும் பொய்யை மெய்யென் 
            றிராதே-இடுங்கடுக உண்டாகின் உண்டாகும் ஊழிற் 
                பெருவலிநோய் விண்டாரைக் கொண்டாடும் வீடு. 
                         (33)

எண்ணி ஒரு கருமம்

  யார்க்குஞ்செய் யொண்ணாது புண்ணியம் வந்தெப்து 
   போதல்லால் கண்ணில்லான் 

மாங்காய் விழவெறிந்த

    மாத்திரைக்கோல் ஒக்குமே ஆங்காலம் ஆகும் அவர்க்கு. 
                         (34)

வருந்திய யழைத்தாலும் வாராத

          வாரா பொருந்துவன போமினென்றால் போகா
                 இருந்தேங்கி நெஞ்சம் புண்ணாக நெடுந்துாரம் 
               தாம்நினைந்து துஞ்சுவதே மாந்தர் தொழில். 
                        (35)

நல்.--2