பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நல்வழி

19

           நல்வழி'’'

உள்ள தொழிய ஒருவர்க் கொருவர் சுகம் கொள்ளக் கிடையா குவலயத்தில்-வெள்ளக் கடலோடி மீண்டும் கரையேறி னாலென் உடலோடு வாழும் உயிர்க்கு. (36)

எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு பொல்லாப் புழுமவிநோய் புன் குரம்பை-நல்லார் அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமலநீர் போல் பிரிந்திருப்பார் பேசார் பிறர்க்கு. (37)

ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும்

ஊழ் கூட்டும் படியன்றிக் கூடாவாம்-தேட்டம் மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின் தரியாது காணும் தனம். (38)

ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமல்வா றுாற்றுப் பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்த்தார் ஆனாலும் இல்லையென மாட்டார் இசைந்து. (39)

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர்-வேண்டா நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும் எமக்கென்னென் றிட்டுண் டிரும். (40)