பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்வழி

25



நீரும் நிழலும் நிலம் பொதியு நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும்-ஊரும்
வருந்திருவும் விரிழ்நாளும் எஞ்சமிலார்க் கென்று
தரும் சிவந்த தாமரையாள் தான்.

(51)

பாடுபட்டுப் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்
காவிதான் போயின பின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.

(52)

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே-மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.

(53)

நீறில்லா நெற்றியாழ் நெய்யில்லா உண்டி பாழ்
ஆறில்லா ஊருக் கழகுபாழ்-மாறில்
உடற்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை.

(54)

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை
எல்லார்க்குங் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.