பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நல்வழி 29

இழுக்குடைய பாட்டிற் கிசைநன்று சால ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று-வழுக்குடைய வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத் தாரத்தின் நன்று தனி. (61)

ஆறிடு மேடும் மடுவும்போல் ஆஞ்செல்வம் மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர்-சோறிடும் தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக உண்ணீர்மை வீறும் உயர்ந்து. (62)

வெட்டெனவே மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில் பட்டுருவும் கோல்பஞ்சிற் பாயாது-நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும். (68)

கல்லானே ஆனாலும் கைப்பொருளொன் றுண்டாயின் எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர்-இல்லானை இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய் வேண்டாள் செல்லா தவின் வாயிற் சொல். (64)

பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும் ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே-தூவா விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக் குரைத் தாலுந் தோன்றா துணர்வு. (65)