பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்னெறி 35

உள்ளம் கவர்ந்தெழுந் தோங்கு சினங்காத்துக் கொள்ளும் குணமே குணமென்க-வெள்ளம் தடுத்தல் அரிதோ தடங்கரைதான் பேர்த்து விடுத்தல் அரிதோ விளம்பு (76)

பொய்ப்புலன்கள் ஐந்தும் நோய் புல்லியர்பா லன்றியே மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம்-துப்பின் சுழற்றுங்கொல் கற்றூணைச் சூறா வளிபோய்ச் சுழற்றும் சிறுபுன் துரும்பு (77)

வருந்தும் உயிர் ஒன்பான் வாயில் உடம்பில் பொருந்துதல் தானே புதுமை-திருந்திழாய் சீதநீர் பொள்ளற் சிறுகுடத்து நில்லாது வீதலோ நிற்றல் வியப்பு. (78)

இல்லானுக் கன்பிங் கிடம்பொருள் ஏவில்மற் றெல்லாம் இருந்துமவற் கென்செய்யும்-நல்லாய் மொழியிலார்க் கேது முதுநூல் தெரியும் விழியிலார்க் கேது விளக்கு. (79)

தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துயர்ந்தோர் தம்மை மதியார் தமையடைந்தோர்-தம்மின் இழியினும் செல்வர் இடர்தீர்ப்பர் அல்கு கழியினும் செல்லாதோ கடல். (80)