பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 நன்னெறி மணி

இல்லறத்தை வெறுத்துத் துறவு பூணத் துணிவு கொண்டிருக்கும் எவனும், பெண் மக்களோடு அடிக்கடி பேசும் பழக்கம் வைத்திருந்தால் அவனது உறுதி தளர்ந்துபோய் விடும். கருங்கல்லாக இருந்தாலும், அதில் எறும்பு ஊர்ந்து கொண்டேயிருந்தால் அதில் குழி விழுந்துவிடுவது இயல்பே யாம்.

                         (86)

நற்குணம் படைத்த மக்களிற் சிலர் கூடக் கீழ்மக்களோடு தொடர்புகொண்டு கீழான சொற்களைப் பேசிவருகின்றனர். இது வியப்பிற்குரியது. நன்றாகப் பழுத்த கனிகளுடைய சோலையிற் புகுந்த காகம், அவற்றை உண்ணாமல் வேப்பங் கனிகளையே விரும்பி உண்ணுகிறது. (87)

கல்வி அறிவு இல்லாத மக்களோடு சேர்ந்தால் கற்று உணர்ந்த நல்லறிஞர்களுடைய பெருமையும் குறைந்து காணப்படும். கனமான இரும்புத்துண்டுகூடத் தெப்பத்தைச் சேர்ந்துவிட்டால் அதன் எடை குறைந்து மிதக்கத் தொடங்கி விடும். (88)

வலுவிழந்த மக்களுக்கு வலிமையுள்ள் மக்கள்தாம் மிகவும் வருந்தி உழைத்து உதவி வருவர். அதற்காக அவர்களிடம் கைம்மாறு எதுவும் எதிர்பார்க்கவில்லை.வாயிலுள்ள பற்கள் கைம்மாறு கருதியா எளிய நாவிற்குக் கடின உணவை மென்று கொடுத்து உதவிவருகின்றன? (89)

நல்லறிஞர்கள் கோபித்துப் பேசினாலும்,வருகிற மக்களுக்கு ஏதாவது கொடுத்து அனுப்புவர். கீழ்மக்கள் இனிய சொற்களை மனங்கனிந்து பேசினாலும், ள்வர்க்கும் எதுவும் வழங்குவதில்லை.வாழை பழுக்காமல் காயாக இருந்தாலும் பயன்படும்;எட்டிப் பழுத்தாலும் எதற்குப் பயன்படும்? (90)