பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 நன்னெறி மணி

நல்ல வழியில் பொருளைத் தேடிய மக்கள்,சாவு தம்மை வந்து தழுவுமுன்னே அறச்செயல்களைச் செய்து மகிழ்ச்சியடைவர்.அது வந்துவிட்டால் என்ன செய்ய முடியும், வெள்ளம் வருமுன்னே அணைகட்டி வைக்கமுடியாத மக்க ள்ால் வெள்ளம் வந்தபின்பு என்ன செய்ய இயலும்! (91)

பெருந்துன்பம் பிறரைத் தாக்கப் போவதாக அறிஞர்கள் அறிந்தால், அவற்றை விரைந்து சென்று தாமே தாங்கி அவர்களைக் காப்பாற்றவர். உடம்பிலுள்ள பிற உறுப்பு களைத் தடியோ, கத்தியோ ஈட்டியோ தாக்க வந்தால்: கையானது விரைந்து சென்று அவற்றைத் தானே தாங்கி அவைகளைக் காப்பாற்ற முயலுகிறது. (92)

உயர்ந்த நூல்களை ஆராய்ந்து அறியும் ஆற்றலும் அறிவும் பெறாதவர்கள் அறச்செயல்களை மிகுதியாகக் செய்துவந்தாலும், அவைகளால் அவர் பயன் பெறார். வைரம் பாய்ந்த மரத்தினால் செய்யப்பெற்ற கதவுகளா யிருப்பினும் தாழ்ப்பாள் ஒன்று இல்லையாயின் அதற்குக் காக்கும் வலிமை சிறிதும் இராது. (98)

தம்மைப் பிறர் தூற்றாமல் போற்றிக்கொண்டிருக்க வேண்டுமென இழிந்த மக்கள் விரும்பி முயலுவர். நல்லறி ஞர்கள் இத்தகைய செயல்களை ஒருபோதும் விரும்புவ தில்லை. ஆறு, குளம், ஏரி முதலியவைகளுக்குக் கரைகள் தேவைப்படுகின்றன. கடலுக்கு ஏது கரை! (94)

தம்மீது சாட்டப்படுகின்ற பழிகளைக் கண்டு அறிவுடைய மக்கள் அஞ்சுவர்.அறிவற்ற மக்கள் சிறிதும் பழிபாவங்களுக்கு அஞ்சுவதில்லை.ஒளிபெற்ற நல்ல கண்களே இருளைக் கண்டு அஞ்சுகின்றன.குருட்டுக்கண் ஏன் அஞ்சும்? (95)