பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்னெறி 41


கொள்ளுங் கொடுங்கூற்றம்

   -கொல்வான் குறுகுதன்முன் உள்ளங் கனிந்தறஞ்செய் 
         துய்கவே-வெள்ளம் வருவதற்கு முன்னர் 
       அணைகோலி வையார் பெருகுதற்கண் என்செய்வார் 
                  பேசு,  (91)

பேரறிஞர் தாக்கும் பிறர் துயரம்

                 தாங்கியே வீரமொடு காக்க விரைகுவார்- 
                   நேரிழாய் மெய்சென்று தாக்கும் வியன் 
             கோ லடிதன்மேல் கைசென்று தாங்கும் கடிது. (92)

பன்னும் பனுவிற் பயன்தேர்

                 அறிவிலார் மன்னும் அறங்கள் வலியிலவே 
                -நன்னுதால் காழொன் றுயர்திண் கதவு 
              வலியுடைத்தோ தாழொன் றிலா தாயின் தான். 
                       (93)

எள்ளா திருப்பு இழிஞர்

        போற்  றர்குரியர் 

விள்ளா அறிஞரது வேண்டாரே

                   - தள்ளாக் கரைக்காப் புளது நீர் கட்டு குளம் 
                     அன்றிக் கரைகாப் புளதோ கடல்.   (94)

அறிவுடையார் அன்றி அது

             பெறார் தம்பால் செறிபழியை அஞ்சார் சிறிதும்
                - பிறைநுதால் வண்ணஞ்செய் வாள்விழியே 
         அன்றி மறைகுருட்டுக் கண்ணஞ்சு மோ இருளைக் 
               - கண்டு. (95)